2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம். கல்வி சிறப்பாக இருக்கும். அப்பா, அம்மாவின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நீண்டகாலமாக சொத்துகள் வாங்க முயற்சித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல மகசூல் உண்டு. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகளும், அரசின் அங்கீகாரமும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். லோன் கிடைக்கும். கணவன் - மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் பிரிவு இருக்காது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
