✕
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையற்ற முயற்சிகள் வேண்டாம். உங்களுடைய உழைப்பால் பிறருக்குத்தான் லாபம் கிடைக்கும். பணம், பொருள் பிறரிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புகழும், தொண்டர்களால் மகிழ்ச்சியும் கிடைக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். டிஜிட்டல் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையால் பெயர், புகழ் கிடைக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கும். கம்பெனி மாற நினைப்பவர்கள் அவசரப்பட வேண்டாம். சிவ வழிபாடு நல்லது.

ராணி
Next Story