2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது. கையில் பணம் இருந்தாலும், யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசு சார்ந்த வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. தேவை இருந்தால் பயணம் செய்யுங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் வருமானம் பரவாயில்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் பிரச்சினைகள் இருக்கும். சமுதாயத்தில் உங்களின் பெயர் புகழ் கெடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சுமாராகத்தான் இருக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினைகள் இல்லை; முன்னேற்றம் இருக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்தவை நடக்கும். பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மர் மற்றும் கிருஷ்ண பகவானை வழிபடுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
