2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வராத பணங்கள் வந்து சேரும். இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். சொந்த தொழிலில் கவனமாக இருங்கள். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அங்கீகாரம் கண்டிப்பாக இருக்கும். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் வருவதில் தாமதம் ஏற்படும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தேவையில்லாத சிந்தனைகள் வேண்டாம். உங்களை பற்றி ஒரு வதந்தி பரவிக்கொண்டே இருக்கும். அதற்காக வருத்தப்பட வேண்டாம். கிரக நிலைகள் மாற மாற உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். செய்யும் வேலையை திருப்தியுடன் செய்யுங்கள். நீங்கள் பெரிய அளவில் முதலீடுகள் செய்யும்போது பார்த்து செய்யுங்கள். அரசியல் வாழ்க்கை பிரச்சினைக்குரியதாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இஷ்ட தெய்வம், குலதெய்வம் மற்றும் பெருமாள் வழிபாட்டினை செய்யுங்கள். நன்மையே நடக்கும்.
