2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லா விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கிரகங்கள் மாறும்பொழுது நமது வாழ்க்கைத்தரமும் மாறும். அதேநேரம் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அரசு சார்ந்த நிகழ்வுகளிலும் கவனமாக இருங்கள். கணவன் - மனைவி உறவுகளிலும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். அப்பாவுடைய உடல் ஆரோக்கியத்தில் முழு கவனமாக இருங்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் யோசித்து செயல்படுங்கள். வேலையை பொறுத்தவரை நிறைய பிரச்சினைகள், அழுத்தங்கள் இருக்கும். அதனால் நிம்மதி என்பது இருக்காது. உங்களது சக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இந்த வாரத்திலேயே செய்து விடுங்கள். உடலில் சின்ன பிரச்சினை என்றாலும் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். சிவன் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 19 March 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story