2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி பரவாயில்லை. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் அதற்கான வேலைகளில் இறங்குங்கள். அப்பாவின் அன்பு, ஆதரவு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் உங்கள் மதத்தின் மீது பற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் சமூக அக்கறை கூடும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்து கொண்டே இருக்கும். உங்களது கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். உங்கள் நட்பை சரியாக தொடருங்கள். பெண் தோழிகளை பிரிந்து செல்வீர்கள். புதிய காதல் மலர்ந்து வெற்றியடைய வாய்ப்புள்ளது. வருமானத்திற்கு ஏற்ற செலவினங்களும் உள்ளது. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவியிடையே சின்ன சின்ன பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. உங்கள் மூத்த சகோதர - சகோதரிகள் விஷயத்திலும், ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடுகள் செய்யும் போதும் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் சிவ வழிபாடும், பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தன்வந்திரி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.
