2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத பொருள் வரவு, தன வரவு இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாரிடமும் கடன் வாங்காமல் இருந்தாலே நல்லது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. பாட்னரோடு தொழில் செய்தால் பாட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். எது எப்படி இருந்தாலும் கௌரவம், புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் குறிப்பாக கெமிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இந்த வாரம் இருக்கிறது. முயற்சிகள் எல்லாம் தெய்வ அனுகூலத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த வாரம் நரசிம்மர் மற்றும் துர்க்கையை வழிபட்டால் இன்னும் நற்பலன்கள் கூடும்.

Updated On 30 April 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story