2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பொருளாதார நிலைகள் நன்றாக இருப்பதால் உங்கள் கையில் பணம், தனம் தங்கும். நீங்கள் நினைத்தது நடப்பதற்கான வாய்ப்புகள், சூழ்நிலைகள் இருக்கின்றன. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்துக்கள் விற்பனையாகும். தேடுதல் என்பது பெரிய அளவில் இருக்கிறது. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனையும், அதற்கு தகுந்த லாபமும் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை பிரச்சினைதான். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், குடும்பத்தில் சுப காரியங்கள் உள்ளிட்டவை நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். இந்த வாரத்தில் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மற்றும் பைரவர் வழிபாடு பிரதானமாக செய்வது நல்லது.

Updated On 6 May 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story