2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள், பேப்பர் போட நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யுங்கள். எது எப்படி இருந்தாலும் இந்த வாரம் உங்களுடைய கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். பெரிய அளவில் தொழில் ஆரம்பிக்கவும், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கவும், தொழில் முனைவோராக வர வேண்டும் எனவும் நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். உங்கள் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றி பெரும். துணிந்து செயல்படுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். வேலை நன்றாக உள்ளது. போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொந்த தொழிலும் நன்றாக உளள்து. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளன. பைரவர் வழிபாடு மற்றும் பெருமாள் ஸ்தலங்களில் இருக்கக்கூடிய கருடாழ்வார் தரிசனம் வாழ்வில் ஏற்றத்தை தரும்.
