2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி நன்றாக உள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் நற்பலன்களை கொடுக்கும். அப்பாவால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் இந்த வாரம் முயற்சி செய்யுங்கள். அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நட்புகள், அந்த நட்பால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. இந்த வாரத்தில் உங்கள் எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை அமையும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இரண்டும் நன்றாகவும், லாபகரமாகவும் இருக்கும். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். இந்த வாரத்தில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. உங்களை நீங்களே பெரிய அளவில் முன்னேற்றம் செய்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள், எதிர்பார்க்காத செய்திகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரத்தில் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தெய்வ அனுகூலத்தை அதிகப்படுத்த தன்வந்திரி பகவானை தரிசனம் செய்யுங்கள். நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.
