2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மூத்த சகோதரர்களால் நன்மைகள் உண்டு. நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். இந்த வாரம் முழுவதுமே உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். வாழ்க்கையில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறும். நடக்காமல் இருந்த காரியங்கள் நடக்கும். வீடு, இடம் மாறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. குறிப்பாக இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. பெரிய அளவில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் நீங்களும் லாபம் அடைவீர்கள். உங்கள் பார்ட்னரும் லாபம் அடைவார். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள் இருக்கின்றன. உங்கள் அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய மாற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். டிஜிட்டல் கரன்சியால் லாபம் அடைய வாய்ப்புள்ளது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். அப்பாவால் நன்மை உண்டாகும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரையும், பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரையும் தரிசனம் செய்யுங்கள்.
