2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் பிறகு வெற்றி பெறுவீர்கள். வரும் 14-ஆம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒன்றில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத செலவினங்கள், விரயங்கள், நஷ்டத்தை சந்திப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. சிவில், மோட்டார், போக்குவரத்து போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யுங்கள். அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனமும், பெருமாள் வழிபாடும் செய்து ஏற்றத்தை பெறுங்கள்.
