2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் நடக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் உதவி செய்வார்கள். இந்த வாரத்தில் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருப்பதற்கு ஏற்றார் போலவே செலவினங்களும் இருக்கிறது. உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். நேர்காணல்களில் கலந்துகொண்டு இருந்தால் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீடு வாங்க வேண்டும், வீடு மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் உள்ளன. உங்களின் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஆகியவையும் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். எது எப்படி இருந்தாலும் உங்களின் ஆசைகள், விருப்பங்கள் பூர்த்தியாகும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபாடு செய்வது நல்லது.
