✕
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் தம்பதிகளின் கருத்து மற்றும் செயல்பாடுகள் ஒருமித்து இருக்கும். குடியிருக்கும் வீட்டில் சிறு பூஜை செய்வது நன்மை பயக்கும். பணியிடத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும் அதில் நீங்கள் பெரிதாக சோபிக்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து குழுவாக பணியாற்றுவது உங்களுக்கு சிரமத்தைத் தரும். தனியாக செயல்பட வேண்டிய நிலைமை உண்டாகும். குழுவாக இயங்குவதை தவிர்ப்பது நல்லது.

ராணி
Next Story