✕
2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
குடும்பத்தில் இணக்கம், பேச்சில் இனிமை இருக்கும். 26ஆம் தேதி சற்று மனக்குழப்பம் இருக்கும். 27, 28 தேதிகளில் சில முயற்சிகள் ஆரம்பத்தில் தாமதமாகி பிறகு வெற்றிகிட்டும். 29, 30 தேதிகளில் முயற்சிகள், தொழில் சம்பந்தமான சில முடிவுகள் வெற்றியை கொடுக்கும். 1, 2 தேதிகளில் சாதகமான முடிவுகள் தோல்வியையும், வாகனம், வீடு சம்பந்தமான செயல்கள் வெற்றியையும் கொடுக்கும். மஞ்சள் நிறத்தை பயன்படுத்தினால் முயற்சிகள் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே சமயம், மஞ்சள் நிறத்தால் பொருள் விரயம், செலவு, வியாபார நஷ்டமும் ஏற்படும்.

ராணி
Next Story