2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைப்பது நடக்கும். உங்கள் எண்ணத்திற்கு ஏற்ற செயல்பாடுகள் இருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் நீங்கும். எதையும் துணிந்து செயல்படுத்துவீர்கள். உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் பிரச்சினைகள் சரியாகும். பொருளாதார அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களை யாரிடமும் பேசாதீர்கள். மற்றவர்கள் பேசுவதை பொறுமையாக கேளுங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கும். வருமானமும் நன்றாக உள்ளது. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் போன்ற தொழில்களில் முதலீடுகள் செய்தால் சுமாரான அளவில் இருக்கும். அதனால் பெரிய அளவில் முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். வேலையில் இடமாற்றம், உழைப்பிற்கேற்ற அங்கீகாரம், முன்னேற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இந்த வாரத்திலேயே செய்வது நல்லது. பெருமாள் கோவிலில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி ஆகியோரை வழிபடுவது சிறந்தது.
