2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் இறை அருளால் வெற்றி பெரும். நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். யாரிடம் பேச நினைக்கிறீர்களோ அவர்களிடம் நேரடியாக பேசுங்கள். அதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக தேடி வரும். எதிர்பாராத பயணம் ஏற்படும். அந்த பயணம் மகிழ்ச்சியை தரும். உங்களது கல்வியில் நல்லதொரு முன்னேற்றம் அமையும். அம்மாவின் அன்பு கிடைக்கும். அவர்களால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, நல்லதொரு வருமானம் அனைத்தும் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்ற யூக வணிகங்கள் எதுவாக இருந்தாலும், இருக்கும் பணத்தை வைத்து முதலீடு செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பழைய பொருட்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவீர்கள். சொந்த தொழில் பரவாயில்லை. முருகன் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு பிரதானமாக செய்யுங்கள் முன்னேற்றம் கிடைக்கும்.
