2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத தெய்வ தரிசனம் மற்றும் ஆலய தரிசனம் ஏற்படும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. ஆனாலும், எதிர்பாராத செலவினங்கள் இருக்கின்றன. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி அடைய வாய்ப்பில்லை. செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். ஷேர், டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். நடைமுறையில் உள்ளதை மட்டும் செய்யுங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி ஆகியவை இருக்கிறது. ஆனால், வருமானங்கள் என்பது சுமார்தான். அம்மாவின் அன்பை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. எது எபப்டி இருந்தாலும் உங்களின் விருப்பம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். பார்க்கும் வேலையில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் முருகனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். விநாயகரையும் தரிசனம் செய்து வாருங்கள்.

Updated On 21 May 2024 1:05 PM IST
ராணி

ராணி

Next Story