2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் கவனமாக இருங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் நிறைய மனவருத்தங்கள், டென்ஷன், போராட்டங்கள் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையுமா? என்றால் சந்தேகம்தான். புதிதாக தொழில் தொடங்குவதற்கோ, முன்னேற்றம் செய்வதற்கோ உண்டான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். அதில் எந்த பலனும் இல்லை. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் மறுபடியும் நடைபெறும். உயர் கல்வியில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. நல்ல வேலையாட்கள் அமைவதில் பிரச்சினை. உடல் ஆரோக்கியத்தில் கவனம். கணவன் - மனைவி இருவரில் பிரிவு அல்லது யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத் தொழில், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் இப்படி எந்த தொழிலும் லாபகரமாக இல்லை. உங்களுடைய கோச்சாரத்தில் சுக்கிரனும், புதனும் 8-ஆம் இடத்தில் இருப்பதால் இறையருளை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும், இஷ்ட தெய்வம் மற்றும் பெண் தெய்வ வழிபாடு செய்யுங்கள்.