2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இயற்கையாகவே தெய்வ அனுகூலம் இருக்கிறது. எதிர்பாராத விதமாக தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில், பணம், தனம், பொருள் இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை உண்டு. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேளையில் மற்றவர்களைவிட நல்ல நிலைக்கு வருவீர்கள். மாற்றங்கள் ஏற்படும். கடன் மற்றும் நோயின் தன்மை குறைய வாய்ப்புள்ளது. எதிர்பாராத என்டெர்டெயின்மென்ட் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்களும் அதில் கலந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். தொழிலை பொறுத்தவரை பரவாயில்லை. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தால் அந்த தொழில் நன்றாக உள்ளது. வாரம் முழுவதும், எங்கெல்லாம் பெருமாள் கோயில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 3:55 PM GMT
ராணி

ராணி

Next Story