2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த பல விஷயங்கள் இந்த வாரம் நிறைவேற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. பண வரவு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த வருமானங்கள் உங்களை வந்தடையும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நல்ல விதமாக நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலம். ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு வருமானமும், லாபமும் அதிகரிக்கும். குறிப்பாக, கமிஷன் ஏஜென்சி, சிறு தொழில், வீட்டிலிருந்து செய்யும் வியாபாரம், ஆன்லைன் பிசினஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேலையை பொறுத்தவரை திருப்தியான சூழ்நிலை நிலவும். வேலையில் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் நண்பர்கள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் விநாயகரையும், முருகனையும் வழிபடுவது நன்மைகளைத் தரும்.
