2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எந்த ஒரு முக்கியமான முடிவெடுப்பதாக இருந்தாலும், ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் செயல்பாடுகள் வெற்றியடையும். குறிப்பாக, மே 14-ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிட்டும். பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும், இடமாற்றம் அல்லது விரைவில் பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, வருமானம் வர வாய்ப்புகள் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கக்கூடும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தொழில் சீராக இருக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகள் அல்லது போட்டிகள் இருந்தாலும், இறுதியில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. யாருக்கும் தேவையில்லாமல் சொத்து அல்லது பண விஷயங்களில் உத்தரவாதம் அளிக்க வேண்டாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். சடங்கு சம்பிரதாயங்களில் அதிக கவனம் செலுத்தாமல், உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், குறிப்பாக சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கும் சென்று வழிபடுவது நல்லது.
