2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையற்ற குழப்பங்களையும், சிந்தனைகளையும் தவிர்க்கவும். உங்கள் மனதை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும். ஒரு பக்கம் உறவுகளால் நன்மை ஏற்படும், அதே சமயம் உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகளும் வரலாம். சொத்துக்களை விற்பதற்கான சூழ்நிலைகள் உருவாகலாம். யூக வணிகங்களில் முதலீடு செய்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும். ஒரு பக்கம் எல்லாமே லாபத்தை கொடுப்பதுபோல் தோன்றினாலும், அது பணமாகவோ, பொருளாகவோ உங்கள் கைக்கு வருவதற்கு நிறைய தடைகள் இருக்கலாம். கலைத்துறையில் இருந்தால், உங்கள் அந்தஸ்து கூடும், புகழ் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல ஏற்றம் இருக்கும். எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கான சூழ்நிலைகளும் உண்டு. வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை நீங்கள் வேலையை விட்டு வெளியேறவோ, வெளியேற்றப்படவோ சூழ்நிலைகள் உள்ளன. எந்த வேலையில் இருந்தாலும் சரி, இந்த வாரம் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு வேலை மாறுவது அல்லது வேறு கம்பெனிக்கு முயற்சிப்பது போன்ற விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது. இந்த வாரம் சிவபெருமானையும், குறிப்பாக விநாயகரையும் நன்றாக வழிபடுங்கள்.
