2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வேலை வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும், வேலையை இழக்கும் சூழ்நிலைகளோ அல்லது வெளியேற்றப்படும் வாய்ப்புகளோ அதிகம் என்பதால் வேலையைப் பற்றிய பயம் இருக்கலாம். அதே சமயம், கடன் குறையவும், நோய் குணமாகவும் வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தைப் பொறுத்தவரை பெரிய லாபம் இல்லை; உங்கள் உழைப்பு மற்றவர்களுக்குப் பயன் அளிக்கும். பணம் முடங்க வாய்ப்புள்ளதால் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்; கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் பகை ஏற்படலாம். இந்த வாரம் வருமானமும், செலவும் சமமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் பெரியளவில் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். சனி உங்கள் ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வெளியேற நேரிடலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டு முதலீடுகள் செய்யலாம். பயணங்களும் சுபமாக முடியும். ஆராய்ச்சி அல்லது பி.ஹெச்.டி மேற்கொள்பவர்கள் இந்த வாரம் தேர்ச்சி பெறுவார்கள். கிரீன் கார்டு, சிட்டிசன் ஷிப்க்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் வரலாம். இந்த வாரம் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும். விநாயகர் மற்றும் குரு பகவானை வழிபடுவது நன்மைகளைத் தரும்.
