2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். ஆனால், அதற்காக நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். சனியின் தாக்கம் இருப்பதால் எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செய்வது நல்லது. வேலை வாய்ப்புகள் இருந்தாலும், பணியிடத்தில் எதிர்பாராத பிரச்சனைகளையும் அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும். வேலைப்பளு அதிகரிக்கும். ஒருவேளை வேலையை விட்டு வெளியேறலாமா என்ற எண்ணமும் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக லாபம் வருவது போலத் தோன்றினாலும், அதில், தடைகளும், பிரச்சனைகளும் இருக்கும். 4-ம் இடத்தில் சுக்கிரன், கேது சாரம் பெற்று இருப்பதால் மகிழ்ச்சி, சந்தோஷத்தில் தடைகள் இருக்கலாம். இந்த வாரம் பொறுமையாக இருப்பது அவசியம். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் மிகவும் கவனமாக இருங்கள்; நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் ஆரோக்கியத்திலும், உங்கள் உயர்கல்வியிலும் கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக இருப்பதால் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தால் இந்த மாதம் செய்யலாம். அது எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரும். உறவுகளைப் பேணுவது முக்கியம். இருப்பினும் ஆண் நண்பர்களாலும், மூத்த சகோதர சகோதரிகளாலும் பிரச்சனைகள் வரலாம். தொழில் தகராறுகள், நிச்சயமற்ற தன்மை, தடைப்பட்டு நடத்தல் போன்றவையும் இருக்கும். இந்த வாரம் விநாயகரையும், முருகனையும் வழிபடுங்கள்.
