2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஊக்கத்தொகை கிடைக்கும். கையில் பணம், பொருள் இருக்கும். கடன் எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைக்கும். உங்கள் காரியங்கள் கைகூடும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாக இருங்கள். மற்றவர்களை நம்புங்கள். உங்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். சந்தேக கண்ணோடு எதையும் பார்க்க வேண்டாம். இந்த வாரம் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். யூக வணிகங்களில் (பங்குச்சந்தை, லாட்டரி) முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பெரிய லாபம் இருக்காது. தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் உங்கள் பார்ட்னருக்கு லாபம் ஏற்பட்டு உங்களுக்கு நஷ்டம் வரலாம். மணவாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வரலாம். பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டு படிப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டு. இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமானையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.
