2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடின உழைப்பு மிகவும் முக்கியம். எந்த செயலையும் ஒத்திப்போடாதீர்கள். பலமுறை முயற்சி செய்த பின்னரே வெற்றி கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நோய் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வெல்வீர்கள். மணவாழ்க்கை சாதாரணமாக இருக்கும், விவாகரத்து கோரியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டு. கணவன் அல்லது மனைவிக்கு தேவையற்ற செலவுகள், நஷ்டங்கள் ஏற்படலாம். சண்டை சச்சரவுகள் கூட வர வாய்ப்புள்ளது. இந்த வாரம் வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்கள் பிரிந்து செல்லவோ அல்லது நீங்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையோ ஏற்படலாம். வெளிநாட்டில் முதலீடு செய்யவும், வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை அடையவும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் மகாலட்சுமியையும், துர்க்கை மற்றும் காளியையும் வழிபடுங்கள்.
