2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சனி பகவான் 3-ம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும். சுறுசுறுப்பாக இருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல், எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்படுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக பணம் இருந்தாலும் செலவுகள் இருக்கும். 12 ஆம் இடத்தை குருவும், சனியும் பார்ப்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடக்கும். குறிப்பாக உடல் உழைப்பு சார்ந்த மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகலாம். ஆனால் உங்கள் வேலைக்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு சக ஊழியர்களும் உயர் அதிகாரிகளும் ஒத்துழைப்பார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது வேறு பண பலன்களையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்குச்சந்தை அல்லது வர்த்தகத்தில் சாதாரண முதலீடுகள் செய்யலாம். நல்ல வருமானம் கிடைக்கும். லாட்டரி, பந்தயம், ஆன்லைன் வணிகம் போன்றவைகளில் சிறிய முதலீடு செய்யலாம். இந்த வாரம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரம் முருகன் மற்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
