2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களின் வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் எப்போதும் ஒரு பயம் இருக்கும். பெரிய அளவில் முயற்சி செய்தால் மட்டுமே வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். வேலையை விட்டு வெளியேறும் சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் இந்த வாரம் செய்யலாம். தேவையற்ற பணக் கடன்களைத் தவிர்க்கவும், திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் முதலீடுகள் செய்யலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக இருக்கும். அந்தஸ்து, புகழ், கௌரவம், செல்வாக்கு பாதுகாக்கப்படும். வியாபாரம் பரவாயில்லை. சிறுதொழில், சுயதொழில், வீட்டிலிருந்து செய்யும் தொழில், ஆன்லைன் வியாபாரம் அனைத்தும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும்; கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிரிவு ஏற்படலாம். நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் இந்த வாரம் விற்க வாய்ப்பு உண்டு. கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். காதல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வர்த்தகம் போன்ற ஊக வணிகங்களில் மிதமாக முதலீடு செய்யலாம், நல்ல வருமானம் கிடைக்கும். கலைத்துறையில் புகழ், அந்தஸ்து கிடைக்கும். முருகப்பெருமானையும், பைரவரையும் வழிபடவும்.
