2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் கஷ்டப்பட்டுதான் வெற்றி பெறும். முயற்சி ஸ்தானத்தில் சனி வக்ர கதியில் இருப்பதால், நீங்கள் நினைத்த காரியங்களில் தடைகள், போராட்டங்கள் ஏற்படும். தேவையில்லாத அலைச்சல், குழப்பங்கள், சிந்தனைகள் இருக்கும். பொறுமையாக இருப்பது அவசியம். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு சுமாரான பலன் உண்டு. 8-ம் இடத்தை சனி பார்ப்பதால் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அது திரும்ப வராது. சொந்த வியாபாரம் சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுதொழில், சுயதொழில், பிளாட்பார்ம் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. முதலீடுகளில் கவனமாக இருக்கவும். எட்டாம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். போக்குவரத்து, வண்டி வாகனங்களில் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். இந்த வாரம் விநாயகரையும், முருகனையும் வழிபடுவது நல்லது.
