2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொருளாதார நிலையை பொறுத்தவரை ராகு இரண்டாம் வீட்டில் இருப்பதாலும், குரு பார்வை இருப்பதாலும், உங்கள் கையில் பணப் புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். 12-ம் வீட்டை குரு, சுக்கிரன் மற்றும் சனி பார்ப்பதால், வசதி இருந்தால் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். முயற்சி ஸ்தானத்தில் வக்ர கதி சனியால், தாமதம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, வேலை இருக்கும். ஆனால் வேலையில் ஒருவித பயமும், போராட்டமும் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் உண்டு. கூட்டாளிகளுடன் வியாபாரம் செய்தால், இருவருக்கும் லாபம் கிடைக்கும். உயர்கல்வி நன்றாக இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றில் சாதாரண முதலீடுகள் கூட நல்ல லாபம் தரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் மற்றும் புகழ் கிடைக்கும். இந்த வாரம் விநாயகரையும் பைரவரையும் வழிபடுங்கள்.
