2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் அமையும். உங்கள் சேவை ஸ்தானத்தில் குரு இருப்பதால், வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை காரணமாக இடமாற்றம், பதவி மாற்றம் அல்லது பணி மாற்றம் ஏற்படலாம். அவசரம், அவசியம் இருந்தால் கடன் வாங்குவதை ஒத்திவைப்பது நல்லது. உடல் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். உங்கள் எட்டாம் இடத்தில் கேது சுக்கிரன் சாரத்தில் இருப்பதால், கணவன்-மனைவி மற்றும் தொழில் பங்குதாரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றி பெறும். நீங்கள் யாரை நம்பியிருக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்கள் கஷ்டங்களை தீர்க்க, இறைவன் யாரையாவது அனுப்புவார். சனி வக்கரகதியில் இருப்பதால், தேவையற்ற சிந்தனைகள், சரியான தூக்கமின்மை மற்றும் நேரத்திற்குச் சாப்பிட முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உங்கள் வழக்கமான தினசரியைப் பின்பற்றுவது நல்லது. ஆராய்ச்சிகள் மற்றும் பிஎச்டி செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த வாரம் காத்திருக்கலாம், அவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் எட்டாம் இடத்தில் கேது இருப்பதால், அந்நிய மொழி பேசுபவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருங்கள். இல்லையெனில், தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த வாரம் முருகன் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

Updated On 9 Sept 2025 12:07 AM IST
ராணி

ராணி

Next Story