2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம், உங்கள் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கிடைத்த வேலையை சந்தோஷமாக செய்யுங்கள், கடின உழைப்பு தேவை. வருமானம் நன்றாக இருக்கும். உங்கள் உழைப்பால் சம்பாதித்த பணம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். வசதி இருப்பவர்கள், வெளியூர் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். உயர் கல்வி, ஆராய்ச்சி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. சோம்பேறித்தனத்தைத் தவிர்த்துவிட்டு சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருங்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். எதிர்பாராத காதல் வாய்ப்புகள் ஏற்படலாம். இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டு வர்த்தகம் செய்பவர்களுக்கு, வருமானம் வரும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். குறிப்பாக, பெண்களால் பிரச்சனைகள், அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
