✕
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் உங்களுக்கு தகவல் தொடர்புகள் முக்கியத்துவமானதாக அமையும். புது புது தகவல் தொடர்புகளை மேற்கொள்வீர்கள். வேலையில் பேச்சை அதிகப்படுத்தினால் வளர்ச்சி அதிகமாகும். வேலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். மூன்று கிரகங்கள் எட்டாம் இடத்தில் இருப்பதால் வீட்டில் அழுத்தங்கள், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் இருக்கும் பதட்டங்களை பொருட்படுத்தாதீர்கள். வார இறுதியில் அனைத்தும் சரியாகும். இந்த வாரம் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்ற வேண்டாம். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு அடிபடுதல், காயம் உண்டாகலாம்.

ராணி
Next Story