✕
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
நினைத்த விஷயத்தை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது. இதனால் வேலைகள் தள்ளிப்போகும். நீங்களே தள்ளிப்போடும் சூழலும் உருவாகலாம். இதனால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. வீட்டிலுள்ள பெரியவர்கள் மீது சிறுசிறு கோபங்கள் வரலாம். குழந்தைகள், கணவன் மற்றும் மனைவியுடன் நல்ல இணக்கம் ஏற்படும். பேச்சுத்திறமை நன்றாக இருக்கும். கோயில்களுக்கு செல்லச்செல்ல வேலை சிறப்பாக இருக்கும். வேலையில் புதுப்புது நபர்களை சந்திப்பீர்கள்.

ராணி
Next Story