2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. வருமானம் இருக்கும். முதலீடுகள் செய்வது சிறந்தது. இல்லையென்றால் தேவையில்லாத விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை இருந்தால் முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து செயல்படுவது நல்லது. உற்பத்திக்கு உகந்த விற்பனை இருக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ட்ரேடிங் மற்றும் ஆன்லைன் தொழிலில் இருப்பவர்கள் முதலீடுகள் செய்யும் முன்பு நிதானமாக செயல்படுவது நல்லது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். எதிர்பாராத பயணம், மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. சிவ வழிபாடும், மகா விஷ்ணுவின் வழிபாடும் மேன்மையை கொடுக்கும்.
