2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மிகப்பெரிய தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். துணிந்து செயல்படுவீர்கள். தெளிவு கிடைக்கும். நம்பியவர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த செய்திகள் வந்த சேரும். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. வருமானம் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் நற்பலன்கள் உண்டாகும். கல்வி சிறப்பாகவே உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சின்ன தடைகள் உள்ளது. குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். எதிர்பாராத மகிழ்ச்சிகரமான பயணம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு கவனம் அவசியம். சொந்த தொழில் சுமாராக உள்ளது. வேலையில் முன்னேற்றம் உண்டு. சக தொழிலாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. பைரவர் வாழிபாடு ஏற்றம் தரும்.
