2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைக்க கூடியவை அனைத்தும் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். அதேநேரம் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் ஓரளவிற்கு கை கூடி வரும். நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம் மகிழ்ச்சியை தரும். சிறு, குறு மற்றும் வீட்டில் வைத்து சொந்த தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் பரவாயில்லை. உங்கள் 8-ஆம் இடத்தினை மூன்று கிரகங்கள் பார்ப்பதால் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால் இந்த வாரமே செய்து விடுங்கள். வேலையில் திருப்தி இருக்காது. உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். செய்யும் வேலையை திருப்தியோடு செய்தால் டென்ஷன், பிரச்சினை, வருத்தம் போன்றவை இருக்காது. இந்த வாரம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் தவிர்த்துவிடுங்கள். லாபம் கிடைக்காது. பெருமாள் மற்றும் விநாயகரை வழிபட்டால் ஏற்றம் கிடைக்கும்.
