✕
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
வாரத்தின் முதல் பாதி சற்று சிக்கல்கள் நிறைந்து காணப்படும். ஆனால் இரண்டாம் பாதியில் நீண்ட வருட பிரச்சினைகள் தீரும். இழந்துபோன உடைமை, மதிப்பு, பணம் போன்றவற்றை விரைவில் திரும்பப் பெறுவீர்கள். ‘நல்ல காலம் பிறக்கும்’. உண்மையான தீபாவளி உங்களுக்குத்தான். நீண்டகாலமாக நிலுவையிலிருக்கும் வழக்கில் சாதகமான முடிவு கிடைக்கும். மூதாதையர்களின் சொத்து கிடைக்கும். பிரிந்திருக்கும் தாய் - தந்தை, தந்தை - மகன்கள், மருமகன் - மருமகள்கள் ஒன்று சேர்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். புதிய வாகனம், நிலம் வாங்குவீர்கள்.

ராணி
Next Story