2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மகரம் - உதவி கிடைக்கும்விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாசை அனைத்தும் பூர்த்தியாகும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை, ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். யாருடைய பணமாவது கையில் இருக்கும். வாழ்க்கை இலக்கை நோக்கி ஓடினால் வெற்றி கிடைக்கும். எந்த செயல்களையும் தள்ளிப்போட வேண்டாம். எதிர்பார்த்தோரிடமிருந்து உதவி கிடைக்கும். சொத்துகள் வாங்க வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நன்மை கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிட்டும். லோன் கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பார்ட்னர்ஷிப்பால் உங்களுக்கு நஷ்டமும், பார்ட்னருக்கு லாபமும் கிடைக்கும். பாஸ்போர்ட், விசா கிடைக்கும். குழந்தைகளுக்காக செலவழிப்பீர்கள். குழந்தைகள் பிரிந்து இருப்பார்கள்.
