✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
விருப்பம், எண்ணம் மற்றும் ஆசை பூர்த்தியாகும். பண வரவு நன்றாக இருக்கும். எதிர்பாராத பயணம் மற்றும் அதனால் சந்தோஷம் இருக்கும். உறவுகளால் நற்பலன்கள் கிட்டும். சிறு தொழில், சுய தொழில் மற்றும் ஆன்லைன் பிஸினஸ் போன்ற பல்வேறு தொழில்கள் செய்பவர்களுக்கு ஏற்றம் இருக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். அப்பா, அம்மாவால் நற்பலன்கள் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். உயர் கல்வி படிக்க நினைப்பவர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லலாம். மூத்த சகோதர, சகோதரிகள் மற்றும் ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. சனி பகவான் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் பலன்கள் கூடும்.

ராணி
Next Story