2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
முயற்சிகள் வெற்றியடையும். யாருடன் தொடர்புகொள்ள நினைக்கிறீர்களோ அவர்களை மட்டும் நேரடியாக தொடர்புகொண்டால் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எப்போதெல்லாம், பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் மன குழப்பங்கள் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை தீர்க்க யாராவது வருவார்கள். கல்வி சிறப்பாக இருக்கும். தாய், தந்தையால் நற்பலன்கள் ஏற்படும். நிரந்தர சொத்துக்களை வாங்குவீர்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளுக்காக செலவழிக்க வேண்டிய சூழல் உண்டு. வேலையில் உள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடன் கொடுக்கவேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். அரசு மற்றும் வரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. மூத்த சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களால் நன்மை உண்டு.
