✕
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானம் நன்றாக இருக்கும். அரசால் காரியங்கள் நடைபெறும். கவுரவம், அந்தஸ்து, புகழ் கூடும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. பெரிய ஸ்டார்ட் அப் கம்பெனியை தொடங்கலாம். உற்பத்திக்கு தகுந்த லாபம் கிடைக்கும். தேவையில்லாமல் கடன் கொடுத்தால் திரும்ப வராது. அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒருபக்கம் நன்மை இருந்தாலும் மற்றொரு பக்கம் சிரமமே ஏற்படும். இட மாற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவருக்கும் லாபம் உண்டு. நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டவர்களுக்கு கைகூடும். மகா லட்சுமி, பிரம்ம வழிபாடு செய்ய நற்பலன்கள் கூடும்.

ராணி
Next Story