2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணம், தனம் உங்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, இடம் மாறுவதற்கான சூழல் ஏற்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய காதல் மலரும். உங்களை அறியாத மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் மற்றும் சுற்றுலா பயணம் செய்வீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். வங்கி கடன் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பார்ப்பதுபோல ஆண் வேலையாட்கள் கிடைப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும். பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேய வழிபாடு ஏற்றத்தை கொடுக்கும்.
