2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சை குறையுங்கள். இல்லை என்றால் அதுவே உங்களுக்கு எதிரியாக மாறும். தேவையில்லாத முயற்சிகள் வேண்டாம். இந்த வாரத்தில் இளைய சகோதர சகோதரிகள், எதிர்பாராத பயணம் ஆகியவற்றிற்காக செலவு செய்வீர்கள். வீடு, இடம், ஊர், முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருக்கும். லாபம் இருக்காது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கல்வியை பொறுத்தவரை சிறப்பாக உள்ளது. உங்களது மகிழ்ச்சி, சந்தோஷத்திற்காக மட்டுமின்றி குழந்தைகளுக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகளை பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். வேலையில் நீங்கள் நினைப்பவை அனைத்தும் நடக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் முருகப்பெருமான் மற்றும் சிவத்தலத்தில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபடுவது நல்லது.
