2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கையில் எப்போதும் பணவரவு, தனவரவு இருந்து கொண்டே இருக்கும். 7-ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும். விற்காமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம், மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் உருவாகும். உற்பத்தி துறை மட்டுமல்லாது சிவில், மோட்டார், டிரான்ஸ்போர்ட் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, வருமானம், நல்லதொரு பெயர், புகழ் இருக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம், சொத்துக்கள் வந்து சேரும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு உள்ளது. வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை. முன்னேற்றம் உண்டு. சிவபெருமான் மற்றும் சிவ தலத்தில் இருக்கக்கூடிய நந்தி வழிபாடு சிறப்பை தரும்.
