2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதாரம் நன்றாக உள்ளது. நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைய வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் இருக்கும். உங்கள் கல்வியும் சிறப்பாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு, அவர்களால் நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்தால் நல்லதொரு லாபம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம், எதிரிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் இருக்கின்றன. வெளிநாடு மற்றும் ஆன்சைட்டுக்கு முயற்சிப்பவர்கள் தங்களது முயற்சியை செய்யலாம். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் உண்டாகும். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். அப்பா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிவன் மற்றும் மகாவிஷ்ணு வழிபாடு அவசியம்.
