2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். விற்காத சொத்துக்கள் விற்பனையாகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். யாரை தொடர்புகொள்ள நினைக்கீர்களோ அவர்களிடம் நேரடியாக பேசுங்கள். வெற்றி கொள்வீர்கள். சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நண்பர்களால் நற்பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத பயணம் மகிழ்ச்சியை தரும். உங்களை நீங்களே மேம்படுத்தி கொள்வீர்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், லாபம் கிடைக்கும். அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். வேலையை பொறுத்தவரை எந்த துறையில் இருந்தாலும் செய்யும் தொழிலை திருப்திகரமாக செய்யுங்கள். பணி அழுத்தம் இருக்கிறது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் அனைத்தும் இந்த வாரம் கிடைக்கும். ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் வழிபாடு சிறப்பை தரும்.
