2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி மற்றும் மெக்கானிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நினைப்பது அனைத்தும் நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். உங்கள் அரசியல் வாழ்க்கை சுமாராக உள்ளது. வேலை நன்றாக உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வு, உங்களுக்கான அங்கீகாரம் அனைத்தும் கிடைக்கும். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் நிச்சயம் கடன் கிடைக்கும். சொந்த தொழில் நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் நரசிம்மர் வழிபாடு சிறந்தது.
