2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் நன்றாக முயற்சி செய்தால், நீங்கள் நினைத்தது, நினைக்காதது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நம்பியவர்களால் நன்மைகள் உண்டாகும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் வெற்றிகள் கிடைக்கும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல்கள் உள்ளன. புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். எல்லாவற்றிலும் லாபம் வருவது போல் ஒரு தோற்றம் இருக்குமே தவிர வராது. காதலில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் உள்ளன. வேலை நிமித்தமாக இடமாற்றம் உண்டு. அதேபோன்று பணியில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்துபோக வாய்ப்புகள் உள்ளன. ஆண் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. மகாலட்சுமி மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சூரியனை வழிபடுவது சிறந்தது.
